உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சா விற்பனை செய்தவர்  குண்டர் சட்டத்தில் கைது 

கஞ்சா விற்பனை செய்தவர்  குண்டர் சட்டத்தில் கைது 

ராமநாதபுரம்; ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்த சனவேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சனவேலி பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். இவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது. இவர் திருவாடானை அருகேயுள்ள தொண்டி புதுக்குடி பகுதியை சேர்ந்த கோட்டைராஜா மகன் செந்தில்குமார் 39, என தெரிய வந்தது. இவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்ததால் சந்தீஷ் எஸ்.பி., இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனுக்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செந்தில்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை