உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் நகை திருடியவர் கைது

வீட்டில் நகை திருடியவர் கைது

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தேரிருவேலியை சேர்ந்தவர் தாமரைகண்ணன் 34. குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது ஒருவர் வெளியே தப்பி சென்றார்.பீரோவை திறந்து பார்த்த போது தோடு, மோதிரம் உட்பட ஒன்றரை பவுன் திருடு போனது தெரிய வந்தது. தேரிருவேலி போலீசில் தாமரைக்கண்ணன் புகாரில் எஸ்.ஐ.,சத்யா நகை திருடிய கீழப்பச்சேரி முனீஸ்வரன் 23, என்பவரை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ