உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்தவர் கைது

மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்தவர் கைது

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியில் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார். தொண்டி புதுக்குடியில் வீடுகளில் ஜெலட்டின் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் சாக்கு மூடையில் 130 ஜெலட்டின் குச்சிகள், 200 டெட்டனேட்டர்கள், 6 மீட்டர் பீஸ் வயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 42, செந்தில்குமார் 39, அப்பாஸ் 30, ஆகியோரை கைது செய்தனர். இச் சம்பவம் 2024 டிச., நடந்தது. இந்நிலையில் மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்த புதுக்கோட்டை மாவட்டம் காலடிபட்டி கிராமத்தில் தங்கியிருந்த இலுப்பூர் வீரப்பட்டியை சேர்ந்த ராஜாக்கண்ணு 47, என்பவரை திருவாடானை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !