உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆக.29ல் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

ஆக.29ல் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆக.29 ல் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. திருவாடானை வட்டாரத்தில் தொடக்கபள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என 112 அரசு பள்ளிகள் உள்ளன. இம் மாதம் ஆக.29ல் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்து, கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்கபடும். போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, மாணவர் சேர்க்கை, பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது விவாதிக்கபடும். கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை. இது குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கபட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ