உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மகம் விழா; பிப்.24ல் பால்குடம் ஊர்வலம்

பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மகம் விழா; பிப்.24ல் பால்குடம் ஊர்வலம்

பரமக்குடி : -பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக பெருவிழாவில் 48 வது ஆண்டு திருச்செந்துார் மிதி வண்டி பயணம் நடக்க உள்ளது.பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது. இங்கு பிப்.22ல் ஆறுமுகனுக்கு பூச்சாற்றுதல் என்னும் சண்முகார்ச்சனை நடக்கிறது.பிப்.23 மாலை 5:00 மணிக்கு குருபடியார் சுப.இலக்குமணன் தலைமையில் திருவிளக்கு வழிபாடு நடக்க உள்ளது. தொடர்ந்து பிப்.24 காலை 7:00 மணி முதல் சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து பால் குடங்கள் புறப்பாடாகி மீண்டும் கோயிலை அடைந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை வீதி உலாவும் நடக்கிறது.மறுநாள் மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இதையடுத்து பிப்.26 காலை 5:00 மணிக்கு கொடி வணக்கம், 9:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மிதிவண்டியில் திருச்செந்துார் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி