கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை ராமானுஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 1887 ஆம் ஆண்டு டிச., 22ல் ஸ்ரீனிவாச ராமானுஜர் கும்பகோணத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே அவர் கணிதத்தில் பெரும் ஆர்வம் காட்டினார். சொந்தமாக பல கணித தேற்றங்களை கண்டறிந்தார். அவரது படைப்புகள் உலகளவில் அங்கீகாரம் பெற்றன. கணித மேதை என்றழைக்கப்படும் அவரது பிறந்த நாள் விழா பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ரவி தலைமை வகித்தார். மாநில நல்லாசிரியர் மற்றும் கணித ஆசிரியர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அவரது உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் அஜ்ரூல் அலிமா நன்றி கூறினார்.