மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
08-Dec-2024
கீழக்கரை, : அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கீழக்கரை நகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தனியார் மகாலில் நடந்தது. முகாமில் 123 துாய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர். நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான்,கமிஷனர் ரெங்கநாயகி, வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், நகராட்சி பொறியாளர்அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, அலுவலர்கள் உதயகுமார், தமிழ்ச்செல்வன் உட்பட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
08-Dec-2024