உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி தாலுகாவில்  மே 15 முதல் 22 வரை மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு முகாம்

கமுதி தாலுகாவில்  மே 15 முதல் 22 வரை மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு முகாம்

ராமநாதபுரம்: கமுதி தாலுகாவில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மே 15 முதல் 22 வரை நடக்கிறது.விடுபட்டவர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளவர்களுக்காக சிறப்பு முகாம் கிராம வாரியாக மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி அலுவலகங்களில் நடக்கிறது.இதன்படி கமுதி தாலுகாவில் மே 15ல் அபிராமம், மே 16ல் கமுதி, மே 17ல் கொம்பூதி, மே 20ல் மேல ராமநதி, மே 21ல் நத்தம், மே 22ல் பேரையூர் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.எனவே மேற்கண்ட கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இம்முகாமிற்கு பதிவு செய்ய வருவோர் ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல் எடுத்து வர வேண்டும்.இதுவரை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் இவ்வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் 73730 04588 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை