உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நான்கு வழிச்சாலையில் மெகா பள்ளம்

நான்கு வழிச்சாலையில் மெகா பள்ளம்

பரமக்குடி : மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழி சாலை உள்ள நிலையில் அரியனேந்தல் பகுதியில் நிறைவடைகிறது. தொடர்ந்து ராமநாதபுரம் வரை இருவழிச் சாலையாக உள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நகருக்குள் நுழையும் இடத்தில் மேம்பாலம் உள்ளது.மதுரை செல்லும் பஸ்கள் மேம்பாலத்தில் செல்லும் நிலையில் பரமக்குடி நகருக்குள் நுழைய பாலத்தின் கீழ் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது முதல் மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.மழையால் ஒவ்வொரு முறையும் பாலத்தின் கீழ் முழங்கால் வரை தண்ணீர் தேங்கும். தற்போதும் தண்ணீர் தேங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டு கார் கவிழும் சூழல் உள்ளது. மேலும் ஏராளமான டூவீலர் ஓட்டிகள் விழுந்து காயம் அடைகின்றனர்.கனரக வாகனங்கள், பஸ்கள் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது. ஆகவே அப்பகுதியில் ரோட்டை தரம் உயர்த்துவதுடன் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை