உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்

கமுதி : கமுதி தாலுகா அலுவலகத்தில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது. தாசில்தார் காதர்முகைதீன் தலைமை வகித்தார்.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர் மணிகண்டன், விடுதி காப்பாளர்கள் பழனி, ராஜ் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். சீர்மரபினர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசு திட்டங்கள் சலுகைகள் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கமுதி தாலுகாவை சுற்றியுள்ள பலர் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி