மேலும் செய்திகள்
சேலையூரில் கோவில் உண்டியல் திருட்டு
12-Jun-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேச்சியம்மன், செல்லி அம்மன், ஓம் சக்தி கோயிலில் கேட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை திருடிச் சென்றனர்.முதுகுளத்துார் கண்மாய் கரையில் உள்ள பேச்சியம்மன் கோயிலை திறக்க நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது கோயிலின் கேட் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் திருடப்பட்டது தெரிய வந்தது. பின் அப்பகுதியில் உடைந்த நிலையில் கிடந்த உண்டியலை போலீசார் கைப்பற்றினர்.* முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலையும் திருடிச் சென்றுள்ளனர். முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள ஓம் சக்தி கோயிலிலும் கேட்டை உடைத்து உண்டியலை திருட முயன்றுள்ளனர்.முதுகுளத்துாரில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு நடந்துள்ளது குறித்து டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
12-Jun-2025