மேலும் செய்திகள்
முதுகுளத்துார் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
20 hour(s) ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி தெருக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. முதுகுளத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. முதுகுளத்துார் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி உத்தரவின் பேரில் அலுவலகப் பணியாளர்கள் சேகர், ராஜேஷ், மேற்பார்வையாளர் சரவணன் முன்னிலையில் தெருக்களில் துாய்மைப் பணியாளர்கள் கொசு மருந்து தெளித்தனர். இதே போன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் கூறினர். அப்போது வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்காமல் பாதுகாக்கவும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறிந்து அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
20 hour(s) ago