உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் - சிக்கல் ரோடு கண்டிலான் அருகே தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. முதுகுளத்துாரில் இருந்து பூங்குளம், கண்டிலான், இளஞ்செம்பூர், பூக்குளம் வழியாக சிக்கல் செல்லும் ரோடு உள்ளது. இங்கு 10க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கால்வாயில் தண்ணீர் செல்வதற்காக கண்டிலான் அருகே தடுப்புச்சுவருடன் சிறுபாலம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் மராமத்து பணி செய்யப்படாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புச்சுவரில் துாண்கள் சேதமடைந்து விழுந்துள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு முன் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து முதுகுளத்துார் சிக்கல் ரோடு கண்டிலான் அருகே பாலத்தில் தடுப்புச்சுவர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ