மேலும் செய்திகள்
மாணவர்களிடையே மோதல்: எஸ்.பி., அறிவுரை வழங்கல்
13-Jun-2025
முதுகுளத்துார்: மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட கவினா சி.பி.எஸ்.இ., பள்ளியைச் சேர்ந்த முதுகுளத்துார் மாணவர் ரீகன் தேர்வு செய்யப்பட்டார்.மாநில அளவில் கால்பந்து போட்டிக்கு விளையாட மாணவர்கள் தேர்வு ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சாம்பக்குளம் அருகே கவினா சி.பி.எஸ்.இ., பள்ளியைச் சேர்ந்த முதுகுளத்துார் மாணவர் ரீகன் 15, தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜூன் 25ல் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் விளையாட உள்ளார். மாநில போட்டிக்கு தேர்வான மாணவர் ரீகன் பள்ளியின் தலைவர் கண்ணதாசன், தாளாளர் ஹேமலதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.
13-Jun-2025