உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் பகுதியில் முளைப்பாரி விழாக்கள்

முதுகுளத்துார் பகுதியில் முளைப்பாரி விழாக்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலுக்கு நகர் தேவர் உறவின் முறை சார்பில் 109ம் ஆண்டு பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். மறவர் தெருவில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் பொங்கல் பெட்டியை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.செல்லி அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், திரவியப் பொடி உட்பட் 21 வகை அபிஷேகம் நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முக்கிய விதிகளில் முளைப்பாரி துாக்கி வந்து ஊருணியில் கங்கை சேர்த்தனர்.*செல்வநாயகபுரம் கிராமத்தில் செல்லி அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. பொங்கல் வைத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை உடைத்து கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் இருந்து ஆற்றுப்பாலம், பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக செல்லி அம்மன் கோயிலுக்கு மக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக துாக்கி வந்து ஊருணியில் கரைத்தனர்.* இளஞ்செம்பூரில் தம்புராட்டி அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. முளைப்பாரியை ஊருணியில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை