உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முளைப்பாரி ஊர்வலம்

 முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன செலுத்தினர். நிறைவு விழாவாக முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரியை கிராம மக்கள் முக்கிய விதிகளில் துாக்கி ஊர்வலமாக சென்று குண்டாற்றில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி