உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் ஆதிவிநாயகர், வில்லாலுடைய அய்யனார், கருமேனி அம்மன், காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதில் காளியம்மன் கோயில் முன்பு பொங்கல் வைத்து மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் எடுத்து வில்லாலுடைய அய்யனார் பாலபிஷேகம், பூஜை நடந்தது. விழாவின் நிறைவாக முளைப்பாரியை ஊர்வலமாக முக்கிய வீதிகளில் கொண்டுசென்று தண்ணீரில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி