உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெயர் பலகை: கிராம மக்கள் கோரிக்கை

பெயர் பலகை: கிராம மக்கள் கோரிக்கை

கடலாடி: கடலாடி அருகே எஸ்.ஆலங்குளத்தில் பிரசித்தி பெற்ற அலியார் சாகிப் தர்கா உள்ளது. இங்குஒவ்வொரு ஆண்டும் ஆக.,ல் மூன்று நாட்கள் சந்தனக்கூடு விழா நடக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு நாடகம் மற்றும் கபடி போட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்டவைகள் நடக்கிறது. பல ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விழாவிற்கு வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் எஸ்.ஆலங்குளத்திற்கு செல்வதற்கான பெயர் பலகை இல்லாததால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.எஸ்.ஆலங்குளம் கிராம மக்கள் கூறியதாவது: கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக ஒரு பிரிவு ரோடு செல்கிறது. மேலச்செல்வனுார் வழியாகவும் ஒரு பிரிவு சாலை வசதி உள்ளது. இரண்டு இடங்களிலும் வழிகாட்டி பெயர் பலகை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலங்குளம் கிராமம் அருகே உள்ள முக்குரோடு பகுதியிலும் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என கிராம மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை