பரமக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்; 189 வழக்குகளுக்கு தீர்வு
பரமக்குடி ; பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 189 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்ரமணியன், குற்றவியல் நீதிபதி பாண்டி மகாராஜா, முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 189 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூ.2 கோடியே 97 லட்சத்து 80 ஆயிரத்து 598 வழங்கப்பட்டது.வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ் மற்றும் அனைத்து வக்கீல்கள் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் முத்து விஜயன், சட்ட தன்னார்வலர் முருகேசன் ஏற்பாடுகளை செய்தனர்.* முதுகுளத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு அமர்வாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிபதி ராஜகுமார், குற்றவியல் நீதிபதி அருண்சங்கர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன விபத்து வழக்கு, 72 வழக்குகளில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 660 இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. வழக்கறிஞர் தர்மர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.