செய்யது அம்மாள் பள்ளியில்தேசிய அஞ்சல் வாரவிழா
ராமநாதபுரம்,- தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தபால்துறை சார்பில் தபால் தலை சேகரிப்பு, கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளித் தாளாளர் பாபு அப்துல்லா தலைமை வகித்தார். ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் கடிதம் எழுதி, அதனை தபால் பெட்டியில் செலுத்தினர்.தலைமையாசிரியர் காஜாமுகைதீன், வணிக மேலாளர் பாலு, மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம், இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் அகமது, உதவி தலைமையாசிரியர் கருணாநிதி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.