உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் உள்ள கோயில்கள் வீடுகளில் நவராத்திரி கொலு

பரமக்குடியில் உள்ள கோயில்கள் வீடுகளில் நவராத்திரி கொலு

அம்மன் வழிபாடு கோலாகலம்பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு அமைத்து அம்மன் வழிபாடு கோலகாலமாக துவங்கியது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு வீடுகள் மற்றும் கோயில்களில் 3, 5, 7, 9 ஆகிய நிலைகளில் படிக்கட்டுகளை அமைத்து கொலு பொம்மைகளை அடுக்கி வைத்தனர். இதன் படி தினமும் பஜனை, கோலாட்டம், கும்மி என பெண்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பரமக்குடி பகுதிகளில் ஏராளமான கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை அதிகரித்தது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடுவர். ஒன்பது நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பரமக்குடியில் உள்ள அம்மன் கோயில்கள் மற்றும் பெருமாள், சிவன் கோயில்களில் தாயார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படு கிறது. மேலும் கோயில்களில் சொற்பொழிவு, பஜனை ஒன்பது நாட்களும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ