உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவராத்திரி கொண்டாட்டம் விழா ஏற்பாடுகள் தீவிரம்

நவராத்திரி கொண்டாட்டம் விழா ஏற்பாடுகள் தீவிரம்

திருவாடானை: திருவாடானை பகுதி யில் கோயில்களில் நவராத்திரி விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் மற்றும் சில கிராமங்களில் உள்ள கோயில்களில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு செப்.,22 முதல் விழா துவங்குகிறது. இது குறித்து சிவாச் சாரியார்கள் கூறியதாவது: ஆடி மாதம் எப்படி அம்பிகைக்கு உகந்ததோ அதே போல் அம்பிகையின் அருளை பெறுவதற்கு மிகவும் ஏற்ற காலம் நவராத்திரி. பெண் சக்தியை போற்றும் உன் னதமான பண்டிகை நவராத்திரி. அன்னை பராசக்தி அசுரர்களை வதம் செய்து வெற்றி கொண்டதை விழாவாக நடத்துவது தான் நவராத்திரி. ஒன்பது நாட்கள் துர்கா, லட்சுமி, சரஸ்வதியை வணங்கி விஜயதசமியில் நிறைவடையும். நவ ராத்திரி ஒன்பது நாட் களிலும் அன்னையின் அருள்வடிவங்களாக பூஜிக்கப்படுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நவாரத்திரியில் அம்பிகையின் அவதாரங் களாக கோயில் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து ஆராதித்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. திருவாடானை தாலுகா வில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா கொண்டாடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை