உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அசைவ விருந்து அன்னதானம்

அசைவ விருந்து அன்னதானம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயில் கிடா வெட்டு விழா நடைபெற்றது. பக்தர்களால் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மூலவர் அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிலுகவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை