உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வடமாடு மஞ்சுவிரட்டு 

வடமாடு மஞ்சுவிரட்டு 

திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் விழா ஆக.26ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. ஆக.29ல் திருவிளக்குபூஜையும், நேற்று இளைஞர் மன்றத்தினர் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. ஒரு காளைக்கு தலா 15 நிமிடம் நிர்ணயம் செய்யபட்டு, குழுவுக்கு 9 வீரர்கள் அனுமதிக்க பட்டனர். காளையை அடக்கியவர்களுக்கும், வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்க பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ