உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர் கல்வி நிலையத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆசிரியர் கல்வி நிலையத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் அனைத்து ஒன்றிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் பங்கேற்றனர். மஞ்சூர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். அப்போது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு முடிய உள்ள மாணவர்களிடையே காணப்படும் கற்றல் இடைவெளிகளை குறைத்து, கல்வி முறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்களை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கற்றல் விளைவுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மஞ்சூர் விரிவுரையாளர்கள் செந்தில் குமார், ராமர், ஜெகநாதன் கருத்துக்களை வழங்கினர். முதுநிலை விரிவுரையாளர் சண்முகவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ