பக்தருக்கு மூலிகை கஞ்சி வழங்கல்
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே எட்டிவயல் ஊராட்சி, இனிசேரி கிராமத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரமம் உள்ளது.இங்கு தினமும் காலை 8:00 முதல் 9:00 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூலிகை கஞ்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து பக்தர்களுக்கு காலை வேளையில் மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது.தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அன்னதானமும் நடக்கிறது.ஆசிரமத்தின் பூஜகர் கர்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் களக்குடி முனியாண்டி, ஆசிரியர்கள் மகாலிங்கம், கோ. சக்தி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.