உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அச்சங்குளம் கூட்டுறவு  நுாற்பாலையை  மீண்டும் இயக்க சி.ஐ.டி.யு., வலியுறுத்தல் அதிகாரிகள் அலட்சியம்

அச்சங்குளம் கூட்டுறவு  நுாற்பாலையை  மீண்டும் இயக்க சி.ஐ.டி.யு., வலியுறுத்தல் அதிகாரிகள் அலட்சியம்

ராமநாதபுரம் : கமுதி அருகே அச்சங்குளம் கூட்டுறவு நுாற்பாலைக்குரிய பஞ்சு கொள்முதல் செய்யப்படாததால் இயந்திரங்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதை அதிகாரிகள் கண்டும் காணாதது போல் அலட்சிமாக உள்ளனர். நுாற்பாலையை மீண்டும் இயக்க வேண்டும் என சி.ஐ.டி.யு., வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் கமுதி அருகே அச்சங்குளத்தில் உள்ள கூட்டுறவு நுாற்பாலை பணியாளர்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில், அச்சங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாயகம் திரும்பியோருக்காக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கூட்டுறவு நுாற்பாலை செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நுாற்பாலை கைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான சிட்டா நுாலை உற்பத்தி செய்கிற நுாற்பாலை ஆகும். இந்த ஆலைக்கு தற்போது பஞ்சு கொள்முதல் செய்யப்படாததால் இயந்திரங்கள் இயக்கப்படாமல் உள்ளன. ஆலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு உரிய பணி கொடுக்காமல் சம்பந்தமில்லாத சில பணிகள் வழங்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் சிரமப்படுவதாக கூறுகின்றனர். ஏற்கனவே பஞ்சு வாங்கிய இடங்களுக்கு நிதி பாக்கி இருப்பதால் அந்த இடங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்ய முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே நுாற்பாலை தற்போது அதிகாரிகளின் மெத்தனத்தால் மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உடனடியாக பஞ்சை கொள்முதல் செய்து ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை