மின்னல் தாக்கி ஒருவர் பலி: ஐந்து பேர் காயம்
கமுதி: கமுதி அருகே எம்.புதுக்குளம் கண்மாயில் விறகு வெட்டிய போது மின்னல் தாக்கியதில் தினகரன் 45, இறந்தார். பெண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். கமுதி அருகே பாக்குவெட்டியை சேர்ந்தவர் தினகரன் 45. அதே பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் எம்.புதுக்குளம் கண்மாயில் விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கமுதி, கோவிலாங்குளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அவ்வப்போது இடியுடன் மழை பெய்தது. இந்நிலையில் எம்.புதுக்குளம் கண்மாயில் விறகு வெட்டிய போது மின்னல் தாக்கியதில் தினகரன் சம்பவ இடத்தில் இறந்தார். அவருடன் விறகு வெட்டிக்கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி இந்திரா, குருவம்மாள், கண்ணம்மாள், மற்றொரு இந்திரா, சங்கரபாண்டியன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோவிலாங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.