இணைய வழி கல்வி வானொலி
பரமக்குடி: பரமக்குடி அருகே தெளிச்சாதநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் இணைய வழி கல்வி வானொலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ஆசிரியை கவிதா பணியாற்றி வருகிறார். இவர் 5 ஆண்டுகளாக மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்களின் கூட்டு முயற்சியுடன் இணைய வழி கல்வி வானொலி (www.onlineKalviRadio.com) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் குரல் பதிவு எனும் எளிய செயல்பாட்டை முன்னிறுத்தி மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோடை விடுமுறையில் ஓய்வு நேர செயல்பாடுகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து பல்வேறு பரிசுகள் பெற காரணமாக இருந்துஉள்ளார்.இவரை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் சேதுராமு, வட்டார கல்வி அலுவலர்கள் சூசைராஜ், சண்முகம், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரிமற்றும் பெற்றோர் பாராட்டினர்.