மேலும் செய்திகள்
ஒற்றுமை ஊர்வலம்
13-May-2025
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் விதமாக பா.ஜ., அ.தி.மு.க., ஹிந்து அமைப்பினர் தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை நம் ராணுவம் தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்துார் என பெயரிட்டனர்.இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று ராமேஸ்வரத்தில் பா.ஜ.,வினர் ஏற்பாட்டில் அ.தி.மு.க., ஹிந்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பலர் தேசியக் கொடி ஏந்தி ராமேஸ்வரம் தேவர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.இவர்கள் திட்டக்குடி, பொந்தம்புளி வழியாக ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் வரை சென்றனர். இதில் பா.ஜ., நகர் தலைவர் மாரி, நிர்வாகி ராமு, அ.தி.மு.க., நிர்வாகிகள் குணசேகரன், அருண்பாண்டியன், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, சேவா பாரதி நகர் தலைவர் சுடலை உட்பட பலர் பங்கேற்றனர்.
13-May-2025