உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க வேண்டும்

ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க வேண்டும்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நுாறுக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. 50 ஆயிரம் முதல் 3 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் ஊராட்சிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.காவிரி மற்றும் உள்ளூர் கிணறுகளில் இருந்து தண்ணீர் ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை முறையாக துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது: பெரும்பாலான ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முறையாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதால் அவற்றில் பாசி படர்ந்து காணப்படுகிறது. ஊராட்சிகளில் உள்ள தெரு குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பாசி படர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ப்ளீச்சிங் பவுடர் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். குடிநீரின் மூலமாக இதர நோய்கள் பரவுவதை தவிர்க்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ