மீனவ பெண்களுக்கு பனை ஓலை பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முன்னேற்றத்திற்கான திட்டத்தில் அரியமான் பகுதியில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அரியமானில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த பனை ஓலை பயிற்சி நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பல்லுயிர் பெருக்கம் பாதுகாப் பகத்தின் உதவி வன பாது காவலர் கோபிநாத் தலைமை வகித்தார். வனச்சரகர் செல்வம், கல்லுாரி முதல்வர் ஜெயஷகீலா முன்னிலை வகித்தனர். பனை ஓலையில் பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து மீனவப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.