உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி ஹிந்து முன்னணி விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

பரமக்குடி ஹிந்து முன்னணி விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

வைகை ஆற்றில் கரைப்புபரமக்குடி: பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவர் ஆடல் அரசன் ஜி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மத்திய அரசு வக்கீல் சுந்தர வடிவேல், அனைத்து கோயில் டிரஸ்டிகள் பங்கேற்றனர். இந்த ஆண்டு ஹிந்து முன்னணி நிறுவனர் மறைந்த கோபால் ஜி நுாற்றாண்டு விழா, ‘தமிழர் பண்பாடும், சனாதன ஹிந்து மதமும் ஒன்றே’ என்ற கோஷத்துடன் நடந்தது. 67 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வேந்தோணி விலக்கு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். சந்தை, சின்ன கடை, ஐந்து முனை, ஒட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பெரிய பஜார் வழியாக பெருமாள் கோயில் வைகை ஆறு படித்துறையை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !