உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தொடர் சொற்பொழிவாற்றி சாதனை தினமலர் விருது பெற்றவர்

பரமக்குடி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தொடர் சொற்பொழிவாற்றி சாதனை தினமலர் விருது பெற்றவர்

பரமக்குடி: பரமக்குடியில் தினமலர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஆயிரம் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கடந்து சாதனை படைத்து வருகிறார். பரமக்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 39 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மீ.சீனிவாசன் 78. இவர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தியமைக்கு திருப்பாவைச் செம்மல், ஆன்மிக அரசு, செஞ்சொல் அரசு எனும் பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் ஏர் இந்தியா, தினமலர் நடத்திய (பிராட் அவுட் லுக் லேர்ன்ட் டீச்சர்) ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்ததில் சிறந்து விளங்கியவர் என்ற வகையில் விருதை 2009ல் பெற்றுள்ளார். தற்போது மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் தினமும் காலை ஆலய அற்புதங்கள் எனும் தலைப்பில் கோயில்கள் பற்றி பேசி வருகிறார். இதன்படி 1000 நாட்களைக் கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து பல்வேறு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஏராளமான கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் நேரடி வர்ணனை செய்துள்ளார். மேலும் பண்பலையில் பணியை தொடர்ந்து செய்து வருவதாக பெருமிதத்துடன் ஆசிரியர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை