தேவிபட்டினம் நவபாஷாண கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் நிர்ணயம்
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்கள் நவபாஷாண கடற்கரை பகுதியில் உள்ள வளாகத்தில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர். பஸ், லாரி உள்ளிட்டவைகளுக்கு ரூ 60, வேன், மினி பஸ் ரூ.50, கார்களுக்கு ரூ.40, ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டன. இந்த வாகன பார்க்கிங் கட்டண வசூல் மேற்கொள்வதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு கட்டண வசூல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.