மேலும் செய்திகள்
மயில்களால் பயிர் சேதம் விவசாயிகள் கவலை
05-Oct-2026
திருவாடானை: திருவாடானை வயல்வெளி பகுதியில் மயில்கள் தோகை விரித்தாடும் அழகை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருவாடானை பகுதியில் கண்மாய்க்கரை மற்றும் வனப்பகுதி ஓரங்களில் வசிக்கும் பறவைகள் தீவனம் தேடி வயல்காட்டு பகுதிக்கு வருகின்றன. காலை, மாலையில் வெளியே வரும் மயில்கள் வயல்களில் தோகை விரித்தாடுவதை அந்த வழியாக செல்லும் மக்களும், விவசாயிகளும் பார்த்து ரசிக்கின்றனர். வழக்கமாக பயிர்களை சேதபடுத்தும் வன விலங்குகளால் அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள் மயில்கள் தங்கள் வயல்களில் சுற்றி வருவதை பார்த்து ரசிக்கின்றனர். சிலர் தங்களது அலைபேசியில் புகைபடங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்கின்றனர்.
05-Oct-2026