நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமம்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி சங்கரபாண்டி ஊருணியில் இருந்து கமுதியை இணைக்கும் ரோட்டில் மழைநீர் தேங்கி சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் நடப்பதற்கே மக்கள் சிரமப்படுகின்றனர். முதுகுளத்துார் பேரூராட்சி கமுதி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ரோடு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது. தற்போது ரோடு அமைத்ததற்கான தடயங்களை இல்லாமல் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் ரோட்டில் மழைநீர் தேங்கி நடப்பதற்கு லாயக்கற்றதாக மாறுகிறது. இதனால் வெளியே நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே முறையாக பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.