உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பெருங்கருணையில் இருந்து வாரியங்கூட்டம் செல்லும் ரோடு மாடசுவாமி கோயில் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள இழுவை கம்பி மூலம் மட்டுமே தற்போது மின்கம்பம் நிற்கிறது. இதனால் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது.இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.கோயிலுக்கு மக்கள் அதிகமாக வருவதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !