உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிணற்றில் தண்ணீர் எடுத்த லாரியை சிறைபிடித்த மக்கள்

கிணற்றில் தண்ணீர் எடுத்த லாரியை சிறைபிடித்த மக்கள்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன் வலசையில் சிலர் கிணறுகள் அமைத்து 40 அடிக்கு கீழே ஆழ்குழாய் அமைத்து தினமும் லாரிகளில் தண்ணீரை எடுத்துச்செல்கின்றனர். இதனால் ஊராட்சி குடிநீர் தரம் குறைந்து உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.நேற்று கிராமத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு சென்ற லாரியை சிறைபிடித்து மக்கள் தடுத்தனர். ராமநாதபுரம் தாசில்தார் ரவி, கேணிக்கரை போலீசார் பேச்சு நடத்தினர். தண்ணீர் வெளியேற்றிய பிறகு லாரியை விடுவிடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை