உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காவிரி குடிநீர் வசதியில்லாமல் மக்கள் சிரமம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் அவலம்

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காவிரி குடிநீர் வசதியில்லாமல் மக்கள் சிரமம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் அவலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட செங்கப்படை, பனையடியேந்தல் உட்பட 4க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட செங்கப்படை, பனையடியேந்தல், வாத்தியனேந்தல், கருநாடான் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வசதி இல்லை. இதனால் தினந்தோறும் குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த ராமு கூறியதாவது:சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வருவதில்லை. இதனால் தினந்தோறும் மக்கள் டிராக்டர் தண்ணீரை ரூ.15 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. டிராக்டர் தண்ணீருக்காக தினந்தோறும் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அமைச்சர் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதிக்கு உட்பட்ட சிறுதலை ஊராட்சியில் காவிரி குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ