உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாயில் பள்ளங்கள் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

பெரிய கண்மாயில் பள்ளங்கள் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் பெரிய கண்மாயில் சீமைக் கருவேலம் மரங்கள் வளர்ந்து, பள்ளங்களில் மட்டும் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது.முதுகுளத்துார் பெரிய கண்மாய் 9 கி.மீ.,ல் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீரால் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 கோடியே 73 லட்சம் செலவில் மடைகள் அமைத்தும் வரத்து கால்வாய்கள், கரைகள் பலப்படுத்தி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. அப்போது பருவமழை பெய்ததால் பணிகள் முழுமை பெறவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக தாசில்தாரிடம் அனுமதி பெற்று சவடுமண் அள்ளி வந்தனர். ஆங்காங்கே மட்டும் சவடுமண் அள்ளப்பட்டு பள்ளங்கள் உருவாகியுள்ளது. தற்போது பெய்த பருவமழைக்கு பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது.எனவே தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாய நிலத்தில் ஆழ்குழாய் தண்ணீரை பாய்ச்சி வந்தனர். பெரிய கண்மாயில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு சீமைக் கருவேலம் மரங்களை அகற்றியும், வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ