மேலும் செய்திகள்
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா தேவை
21-Dec-2025
திருவாடானை: கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருப்பதால் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுரை கூறினர். திருவாடானை சப்-டிவிசனில் உள்ள திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்,மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:- முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவை உதவியாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர். வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும். எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்றனர்.
21-Dec-2025