உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மது விற்பனை ஆய்வின் போது மோதல் போலீஸ்காரர், மாற்றுத்திறனாளி காயம்

மது விற்பனை ஆய்வின் போது மோதல் போலீஸ்காரர், மாற்றுத்திறனாளி காயம்

முதுகுளத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சித்திரங்குடியில் பெட்டிக்கடையில் மது விற்கப்படுகிறதா என ஆய்வு செய்த போது ஏற்பட்ட மோதலில் கடை உரிமையாளர் மாற்றுத்திறனாளி தங்கவேலுக்கு 40, எலும்பு முறிவும், பேரையூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் லிங்குசாமிக்கு தலையில் காயமும் ஏற்பட்டது.சித்திரங்குடியில் மாற்றுத்திறனாளி தங்கவேல் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடையில் பேரையூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் லிங்குசாமி மது விற்பனை நடக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் தங்கவேல் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லிங்குசாமி தலையில் காயம் அடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது: லிங்குசாமி ஆய்வு என்ற பெயரில் பெட்டிகடையில் தங்கவேலுவை எச்சரித்து கடுமையாக தாக்கியுள்ளார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார். தாக்குதல் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அதனை போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும் என்றார்.டி.எஸ்.பி., சண்முகம் கூறியதாவது: சண்டையிட்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ