உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குச்சி ஐஸ், டால்பின், பன் பட்டர்பிளை பட்டாசுகள்

குச்சி ஐஸ், டால்பின், பன் பட்டர்பிளை பட்டாசுகள்

சிவகாசி:தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புது புது ரகங்களில் பட்டாசுகள் தயாரிப்பது வழக்கம். தீபாவளி நெருங்கும் நிலையில் சிறுவர்களை கவருவதற்காக குல்பி ஐஸ், கடலில் துள்ளிக் குதிக்கும் டால்பின், பறந்து விளையாட பன் பட்டர்பிளை என பல்வேறு வித விதமான பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன.சிவகாசியில் தீபாவளிக்காக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தீபாவளிக்கும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும். எப்போதும் இருக்கும் பட்டாசுகளை நவீன மயமாக்கி அதில் புதுமையை இந்தாண்டு புகுத்தியுள்ளனர்.குல்பி ஐஸ் பட்டாசு : இந்த வகை பட்டாசில் குல்பி ஹை ஸ்போர்ட் கையில் பிடித்துக் கொண்டு பற்ற வைத்தால் கலர் கலராக தீப்பொறி பறந்து பரவசப்படுத்தும். சாப்பிட நினைக்க கூடாது.பன் பட்டர்பிளை : வண்ணத்துப்பூச்சி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டாசை பற்ற வைத்தால் வண்ணத்துப்பூச்சியை போன்று ரீங்காரமிட்டு பறக்கும். ஆனால் கையில் பிடித்தால் சுட்டு விடும்.டால்பின் ஷோ : இதனைப் பற்ற வைத்தால் டால்பின் வாயிலிருந்து தீப்பொறியானது நீரூற்று போல வெளியே வரும். குடிக்க நினைக்கக் கூடாது.மிலிட்டரி டேங்க் : துப்பாக்கியை கூட வாங்கி வெடிக்க முடியாதவர்கள் மிலிட்டரி டேங்கையே வெடிக்க வைக்கலாம் இதைப் பற்ற வைத்தால் புஸ்வானம் போல தீப்பொறி பட்டையை கிளப்பும்.லுானி டியூன்ஸ் : இது கார்ட்டூன் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் பச்சை நிறத்திலும் அடுத்து சிவப்பு நிறத்திலும் படபடவென சத்தத்துடன் பொரியும்.டோரேமேன் : சங்கு சக்கரத்தை பொதுவாக தரையில் வைத்து தான் பற்ற வைப்போம். தரையில் சுத்தும். ஆனால் இந்த பட்டாசு கம்பியில் இணைக்கப்பட்ட நிலையில் அந்தரத்தில் சுற்றி பரவசப்படுத்தும்.இதுபோன்று எண்ணற்ற வகையான பட்டாசுகள் சிவகாசியில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. அனைத்து பட்டாசுகளும் பாதுகாப்பான முறையில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !