உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராமநாதபுரம்: பிரதோஷத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அதனை சுற்றியுள்ள சிவன் கோயில்களில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் மாலை 4:30மணிக்கு நந்தி, மூலவருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:30மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மனுடன் உட்பிரகாரத்தை வலம் வந்தார். இதே போல முகவை ஊருணி காசிவிஸ்வநாதர் கோயில், வெளிபட்டணம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், குமரய்யா கோவில் ரோட்டில் உள்ள சிவஞானேஸ்வரர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில், நீலகண்டி ஊருணி ராமநாதசுவாமி, காசிவிஸ்வநாதர் கோயில் ஆகிய இடங்களில் பிரதோஷ வேளையில் நந்தீஸ்வரர், மூலவர் சிவபெருமான், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டு கொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ