உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஈசன் முனியசாமி என்பவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த யாராவது கடன் வசூலிக்க வந்தால் செருப்பால் அடிக்க வேண்டும். செருப்பால் அடிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். கூட்டுறவு சங்கத்திற்குள் செருப்பை வீச வேண்டும் என பேசியுள்ளார். கூட்டுறவு சங்கத்தினரை தாக்க வேண்டும் எனக் கூறியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் குஞ்சரபாண்டியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி