உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி சனி: திருப்புல்லாணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புரட்டாசி சனி: திருப்புல்லாணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதும் சனியின் பார்வையும் பலவீனமடையும் என நம்பப்படுகிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ.,ல் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. சமஸ்தான நிர்வாகத்தினர் கூறியதாவது: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் உள்ளூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி மற்றும் வரிசை ஒழுங்கு படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர். திருப்புல்லாணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை