உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் தெரு நாய்க்கு  வெறிநோய் தடுப்பூசி முகாம்

ராமநாதபுரத்தில் தெரு நாய்க்கு  வெறிநோய் தடுப்பூசி முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம், கால்நடைபராமரிப்பு துறையுடன் இணைந்து நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் வகையில் வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடக்கிறது.ராமநாதபுரத்தில் 33 வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துஉள்ளது. மாதந்தோறும் 10க்கும் மேற்பட்டவர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து நாய்களுக்கு தடுப்பூசி போட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் மேற்பார்வையில் நகர்நல அலுவலர் டாக்டர் ரத்தினகுமார், சுகாதார அலுவலர் நல்லுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணக்குமார், மாரிமுத்து, ஸ்ரீ ஜேஸ்குமார், கால்நடைபராமரிப்புதுறை மருத்துவக்குழுவினர் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.தாலுகா அலுவலகம்,பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை வலைகளை பயன்படுத்தி பிடித்து அவற்றிற்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் வகையில் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு மீண்டும் நாய்களை அவிழ்த்து விடுகின்றனர். 33 வார்டுகளிலும் இப்பணி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ