மழை வெள்ளம்: பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிப்பு; அரசு நிவாரணம் அறிவிக்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால்பல ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர் வகைகள்மூழ்கியுள்ளன. போர்க்கால அடிப்படையில் அரசு உடனடிநிவாரணம் அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.மாவட்டத்தில்மானாவாரியாக 1 லட்சத்து 28ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும்வட கிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்குமுன்பு வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர்.இதே போல மிளகாய், பருத்தி, கடலை, சிறுதானிய பயிர்சாகுபடியும் நடக்கிறது.இந்நிலையில் புரட்டாசி, ஜப்பசியில்பெய்ய வேண்டிய மழை பருவம் தவறி கார்த்திகையில்கொட்டித்தீர்த்துள்ளதால் வளர்ந்து பால் பிடிக்கும் சமயத்தில்பல ஆயிரம் ஏக்கரில் வெள்ள நீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதால்விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர்கூறுகையில், ஏக்கருக்கு ரூ.25 முதல் 30 ஆயிரம் வரைசெலவாகியுள்ளது. பருவம் தவறிய மழையால் வயலில்வெள்ளநீர் புகுந்து நன்கு வளர்ந்த நிலையில் பயிர்கள்சாய்ந்துள்ளன.எனவே மாவட்ட முழுவதும் பயிர் சேதம்குறித்து கணக்கெடுப்பு நடத்தி விரைவில் அரசு பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம்வரை வழங்க வேண்டும் என்றார்.