மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்
03-Sep-2024
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தத்தில் படிக்கட்டுகள் சேதமடைந்ததால் பக்தர்கள் ஆபத்தான முறையில் சிரமப்பட்டு நீராடுகின்றனர்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் நீராட வசதியாக 2019ல் மத்திய சுற்றுலா நிதியில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமென்ட் சிலாப்புகளை பயன்படுத்தி படிக்கட்டுகள் அமைத்தனர்.இந்த சிலாப்புகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து தாறுமாறாக கிடக்கின்றன. கூட்ட நெரிசல் சமயத்தில் இவ்வழியாக நீராட செல்லும் பக்தர்கள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனை முழுவதுமாக அகற்றி இயற்கை சார்ந்த கடற்கரை மணல் பரப்புடன் அமைக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பக்தர்கள் நலன் கருதி இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
03-Sep-2024